பொதுத் தேர்தலுக்கான செலவு ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் இன்று (15) கலந்துரையாடவுள்ளதாகவும் அந்த கலந்துரையாடல்களை தொடர்ந்து கட்சிகள் வேட்பாளர்களுக்காக செலவு செய்யவேண்டிய அதிகபட்சத் தொகை அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இன்று ஊடக பிரதானிகளுடனும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதுடன், நாளை (16) அமைச்சுகளின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளின் பிரதானிகளுடன் முக்கிய பேச்சு வார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.இதுதொடர்பில் நேற்று (14) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் செயற்பாடுகள் நிறைவடைந் துள்ள நிலையில், 759 வேட்புமனுக்கள் தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு கிடைத்திருந்தன.

அவற்றில் 70 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 689 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

அதற்கமைய, தேசியப்பட்டியலுக்காக முன்னிலையாகியுள்ள வேட்புமனுக்களுடன் அரசியல் கட்சிகளிலிருந்து 5,464 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து 3,357 வேட்பாளர்கள் என்ற அடிப்படை யில் 8,821 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

அதேபோன்று, 1981ஆம் ஆண்டு, இலக்கம் 01 கொண்ட பொதுத் தேர்தலுக்கான சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன.

அந்தச் சட்டத் தின் 15ஆவது உறுப்புரையின் பிரகாரமே வேட்பு மனுக்கள் கையளிக்கப்பட வேண்டும்.

அவ்வாறு கையளிக்கப்படாத வேட்புமனுக்கள் அந்தச் சட்டத்தின் 19ஆவது உறுப்புரையின் பிரகாரம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

அந்த வேட்புமனுக்கள் தேர்தல் ஆணைக் குழுவின் பரிந்துரைக்கமைய தெரிவத்தாட்சி அதிகாரிகளினால் நிராகரிக்கப்படுவார்கள்.

தேர்தல் ஆணைக்குழு மற்றும் தெரிவத்தாட்சி அதிகாரிகளின் தனிப்பட்ட நோக்கங்களுக்காக வேட்புமனுக்கள் இரத்துச் செய்யப்படுவதில்லை.

மேற்குறிப்பிட்ட சட்ட ஏற்பாடுகளின் அடிப்படை யில் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களே நிராகரிக்கப்படும்.

எனவே, இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விமர்சனங்களில் தேர்தல் ஆணைக்குழு பொறுப்புக் கூறாது.இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான செலவு ஒழுங்குப்படுத்தல் தொடர்பில் சம்பந் தப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலா ளர்களுடனான கலந்துரையாடல் இன்று (15) இடம்பெறவுள்ளது.

அதற்கமைய, சம்பந்தப்பட்ட கட்சி செயலாளர்களுடன் கலந்துரையாடி தேர்தல் செலவுக்கான அதிகபட்ச நிதி தீர்மானிக்கப்படும்.

அதேபோன்று, சுயாதீனக் குழுக்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத் தாட்சிகளுடன் கலந்துரையாடி தொகையை தீர்மானிப்பார்கள்.

அந்த முழு தீர்மானங்களும் கிடைத்தவுடன் ஒவ்வொரு அரசியல் கட்சிகள் வேட்பாளர்களுக்காக செலவு செய்யக்கூடிய நிதியை தீர்மானிக்கத் தேர்தல் ஆணைக்குழுவினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், இன்று செவ்வாய்க்கிழமை சகல ஊடக பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

நாளை (16) அமைச்சுகளின் செயலாளர்கள், மேலதிக செயலாளர்கள், கூட்டுத்தாபனம் மற்றும் சபைகளின் பிரதா னிகளுடன் கலந்துரையாடவுள்ளோம்.

அவர்கள் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும், ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் தொடர்பிலும் பரிந்துரை வழங்க எதிர்பார்த்திருக்கிறோம் என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *