Month: November 2024

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 2 ரூபாவினால் குறைத்து 309 ரூபாவாக நிர்ணயித்துள்ளது. அத்துடன், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின்…

பன்றிக்காய்ச்சல் தொடர்பில் வெளியான தகவல்

ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப்படாத பண்ணைகளில் உள்ள இறைச்சியை தனிமைப்படுத்தல் முறையின் கீழ் மனித பாவனைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் டொக்டர் சிசிர பியசிறி தெரிவித்தார். மேலும்,…

சீரற்ற காலநிலையால் தொற்று நோய் பரவும் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உணவு மற்றும் பானங்களை கொள்வனவு செய்யும் போது மற்றும் உட்கொள்ளும் போது பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதார சேவைகள்…

சீரற்ற வானிலையால் இதுவரை 15 பேர் உயிரிழப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 1,41,268 குடும்பங்களைச் சேர்ந்த 4,075,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,937 குடும்பங்களைச் சேர்ந்த 32,361 பேர் 366 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 101 வீடுகள் முழுமையாகவும், 2,591 வீடுகள்…

நைஜர் ஆற்றில் படகு கவிழ்ந்து 27 பேர் பலி!

நைஜீரியாவின் வடக்குப் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. கோகி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கிச் சென்ற அந்த படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்தனர். படகு கவிழ்ந்ததும் அதில் இருந்த…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் அழிவடைந்த அரிசி, கோதுமை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சோயா பீன்ஸ் செய்கையாளர்களுக்கு ஒவ்வொரு ஏக்கருக்கும் அதிகபட்சமாக 40,000 ரூபா நட்டஈடு வழங்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.…

உயர்தரப் பரீட்சைக்கான புதிய நேர அட்டவணை வெளியானது

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சைகளை டிசம்பர் 3 ஆம் திகதி வரை ஒத்திவைக்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று அறிவித்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்ட நேர அட்டவணையின் படியே 04…

சீரற்ற காலநிலையால் மரக்கறி வியாபாரம் பாதிப்பு

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு பெறப்படும் மரக்கறிகளின் தொகை 60 % வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மரக்கறிகளை கொள்வனவு செய்ய வரும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவு குறைந்து, மரக்கறிகளின் விலையும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொருளாதார…

மலையக ரயில் சேவை பாதிப்பு

மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக மலையக ரயில் சேவையில் மேலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா வரையிலான மலையகப் பாதையில் நான்காவது நாளாக ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இதேவேளை,…

எலிக்காய்ச்சல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

எலிக்காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் சிறுநீரகம், இதயம் மற்றும் மூளை ஆகிய உறுப்புகள் செயலிழந்து மரணம் கூட ஏற்படலாம் என மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் கபில கன்னங்கர எச்சரித்துள்ளார். எலிக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை வேலைகளுக்காக செல்பவர்கள் ஒரு…