கொதிக்கும் பால் பானைக்குள் விழுந்து பலியான பச்சிளம் குழந்தை
ராஜஸ்தான் மாநிலம் தீக் மாவட்டத்தில் உள்ள அக்மா பகுதியை சேர்ந்த 3 வயது குழந்தை சரிகா, வீட்டின் சமையலறையில் கொதிக்கும் பால் நிறைந்த பானைக்குள் தவறி விழுந்துள்ளார். பூனையை பார்த்து குழந்தை பயந்து ஓடியபோது எதிர்பாராத விதமாக இந்த விபத்து நிகழ்ந்துவிட்டதாக…
நுளம்புகளுக்கு எமனாக மாறிய மனித இரத்தம் ; ஆய்வில் வெளியான தகவல்
சயின்ஸ் டிரான்ஸ்லேஷன் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், நுளம்புகளின் எண்ணிக்கையை அடக்கி மலேரியாவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்ட நிடிசினோன் என்ற மற்றொரு மருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பூச்சிகளால் பரவும் நோய்கள் பரவுவதை தடுப்பதற்கான ஒரு வழி, விலங்குகள் மற்றும்…
சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் !
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் ஏப்ரல் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான 2 வழக்குகளில் அவர் இன்று பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலுமொரு இலஞ்ச ஊழல் வழக்கில் அவருக்கு விளக்கமறியல் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஏப்ரலில்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்மென தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த மூன்று…
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் கைது
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தால் (CIABOC) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.சில நிமிடங்களுக்கு முன்பு, இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்…
தெவிநுவர துப்பாக்கிச் சூடு : தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபர்கள் கைது
கடந்த 21 ஆம் திகதி கந்தர பொலிஸ் பிரிவின் தெவிநுவரவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் புத்தளம் வென்னப்புவை பகுதிக்கு…
தென் கொரியாவில் காட்டுத்தீ – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தென் கொரியாவின் தென்கிழக்கில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயினால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலைமை “முன்னெப்போதும் இல்லாத வகையில்” தொடர்ந்து மோசமாக உள்ளது என தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ தெரிவித்துள்ளார். தீ அதிகம் பரவி வருவதால் 23,000க்கும் மேற்பட்டோர்…
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் பலி
எப்பாவல பொலிஸ் பிரிவின் கிரலோகம பகுதியில் உள்ள ஒரு மடத்துக்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (25) பிற்பகல் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் கிடைத்த புகாரின் அடிப்படையில் இது தொடர்பாக விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட…
தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை – விவாத திகதிகள் அறிவிப்பு
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்கும் முன்மொழிவு ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்
தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள விசேட தீர்மானம்
தேர்தலின் போது எடுக்கும் முடிவுகளை அறிவிக்குமாறு அனைத்து அமைச்சுகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்காமல் சில அமைச்சுகள் சில முடிவுகளை எடுத்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். எவ்வாறாயினும் பின்னர்…