“அரசியல் சானக்கியர்கள் என்று கூறிக்கொள்ளும் எம் அரசியல் தலைவர்கள்,சஜித் பிரேமதாச வெல்லப் போவதாக கணிதம் கற்பித்து எம் சமூகத்தை மடையராகினார்கள், அனுர ஜனாதிபதி ஆகினால் ஆணும் ஆணும் திருமணம் செய்ய முடியும் ,தாடி வைக்க தடை வரும் என்று அவதூறு பரப்பினார்கள் இறுதியில் ஒரு அரசியல்வாதி “தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள் அனைவரும் நரகவாதிகள் என்று கூறினார்கள்” இவர்கள் மார்க்கமும் தெரியாத அரசியலும் தெரியாத மடையர்கள் என்பதை மக்கள் தற்போது புரிந்து கொண்டனர்” என தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட முஸ்லிம் வேட்பாளர் அரூஸ் அஸாத் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நேற்று பேருவளை , மரதானை பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் ,கடந்த 2018 ஆம் ஆண்டு பேருவளை நகர சபை தேர்தலில் போட்டியிட்ட எனக்கு 799 பேர் வாக்களித்தனர் ,நகர சபை உறுப்பினர் பதவி இறுதி வரையில் அந்த 799 பேரினதும் கண்ணியத்தை காத்து நின்றெனே தவிர விலை போகவில்லை என தெரிவித்தார்.

மேலும் அக்காலத்தில் ஊரிலுள்ள பல்வேறுபட்ட பிரச்சினைகளை எழுத்துமூலம் எழுதி எழுதி கை வலித்ததே ஒழிய வேறேதும் நடக்கவில்லை , மக்கள் வாக்குகளை பெற்று ஆசனங்களில் அமர்ந்த பின் மக்களை ஏமாற்றி காலம் கடத்தியவர்கள் தான் எம் அரசியல்வாதிகள் என்றும் அவர் தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *