முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டார்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவர் சுடப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.