அமெரிக்கா மாத்திரமல்லாது உலகம் முழுவதும் அமெரிக்காவின் ஜனாதிபதி யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மாறியுள்ளார்.அமரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹரிஸும் போட்டியிட்டிருந்தார்கள்.அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ‘எலக்டோரல் காலேஜ்’ அதாவது வாக்காளர் குழு நடைமுறை பின்பற்றப்படுகிறது.

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள்.

சிறிய மாகாணங்களில் 1 முதல் பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வரை வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும்.

அந்த வகையில், ட்ரம்ப் 266, கமலா ஹாரிஸ் 205 என்ற எண்ணிக்கையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஒரு மாகாணத்தில் குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றால், அந்த மாகாணத்தின் ‘எலக்டோரல் காலேஜ்’ வாக்குகள் முழுவதும் வெற்றி வேட்பாளரை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் 270 வாக்காளர் குழு உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

அதன்படி, இந்த தேர்தலில் முக்கிய மாகாணங்களில் இருந்து அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கைகளின் படி ஒக்லஹோமா, மிசௌரி, இண்டியானா, கென்டக்கி, டென்னஸ்ஸி, அலபாமா, புளோரிடா, மேற்கு விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களில் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்தது.

அதேபோல கமலா ஹரிஸைப் பொருத்தவரை, கலிபோர்னியா, ஒரேகான், வாஷிங்டன், நியூயோர்க், வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மசாசூசெட்ஸ், மேரிலேன்ட், ஓரிகன், இல்லினாய்ஸ், டிஸ்ட்ரிக்ட் ஆஃப் கொலம்பியா உள்ளிட்ட மாகாணங்களை வசப்படுத்தியிருந்தாலும் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *