தேர்தல் காலத்தில் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை நிவர்த்தி செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், முப்படைகள் மற்றும் இலங்கைப் பொலிஸாரும் இதற்காக இணைந்து செயற்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
மேலும், எந்த ஒரு பேரிடர் சூழ்நிலையையும் கையாள்வதற்கான சிறப்பு மையம் இன்று முதல் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி, இந்த சிறப்பு மையம், இன்று முதல் 16ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு செயல்படும்.