பொதுத் தேர்தல் கடமைகளுக்காக நீண்ட வார விடுமுறை முடித்துவிட்டு தங்களது பணியிடங்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக சிறப்பு ரயில்களை இயக்கத் ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
வழக்கமான ரயில் சேவைக்கு மேலதிகமாக இன்றும் நாளையும் சிறப்பு ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, 7 சிறப்பு ரயில் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும், கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், பெலியத்தவிலிருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இயங்குகின்றன.
அத்துடன், கொழும்பு கோட்டையிலிருந்து ஹிக்கடுவை வரையிலும், மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும், காலியில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.