ஐக்கிய மக்கள் சக்தி சம்பிரதாய எதிர்க்கட்சியாக செயல்பட தயாராக இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி சம்பிரதாய அரசியலுக்கு சவால் விடுத்த ஒரு அரசியல் இயக்கமாகும். ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் குறைபாடுகள் நிகழ்ந்தன.
அந்த குறைபாடுகளை ஆய்வு செய்து வருகிறோம்.என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.
இன்றைய ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,மக்கள் விடுதலை முன்னணியினர் வன்முறையை கைவிட்டு 1981 இல் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டனர். அன்றில் இருந்து அவர்களால் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியவில்லை.
ஆனால் ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வாவை பதவி விலகுமாறு எவரும் கூறவில்லை. தோல்வியுற்ற அவர்கள் தோல்வியை சகித்துக் கொண்டு தங்கள் இலக்குகளை நோக்கி நகர்ந்தனர்.
ஐக்கிய தேசியக் கட்சியே எங்களின் ஸ்தாபக முகாம். ஐக்கிய தேசியக் கட்சி 51 இல் 8 ஆசனங்களாக குறைந்தது. 1971 இல் ஐக்கிய தேசியக் கட்சி 17 ஆசனங்களுக்கு வீழ்ந்தது.
அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு அதிகாரம் கிடைத்தது. ஆனால் கூடிய அதிகாரம் கிடைத்தவுடன் அந்த ஆட்சிகள் அரசியல் அவலங்களில் முடிவுக்கு வந்தன.
அந்த அரசியல் அவலத்தின் இறுதியில் 77 ஆம் ஆண்டபப் நடந்த தேர்தலில் ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு மக்கள் ஆறில் ஐந்து பெரும்பான்மையை வழங்கினர்.
அர்ப்பணிப்புள்ள கட்சியாக, ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம் எமது பொறுப்பை நிறைவேற்றி வருகிறோம்.
ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் பணியாற்றுவோம்.
நாட்டு மக்களுக்கு அரசாங்கம் செய்யும் நல்ல காரியங்களுக்கு நாம் நல்ல பதிலை வழங்குவோம். ஏனைய சந்தர்ப்பங்களில் விமர்சனங்களை முன்வைக்கவும் நாம் தயங்க மாட்டோம்.