குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் அறிகுறிகள் அதிகரித்து வருவதுடன், வைரஸ் தொற்று மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் (LRH) குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
இருமல், சளி, உடல்வலி மற்றும் அவ்வப்போது வாந்தி உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் பொதுவாக பாதிக்கப்பட்ட குழந்தைகளில் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், குழந்தைகளின் அறிகுறிகளை உன்னிப்பாகக் அவதானித்து உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு பெற்றோருக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
எனினும், பாடசாலை மாணவர்களிடையே கை, கால் மற்றும் வாய் பகுதிகளில் புண்கள் (சொறி) (HFMD) அதிகரித்து வருவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு உள்ளங்கைகள் மற்றும் கால்களில் சிறிய வெள்ளை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால், அதே போல் வாயில் பழுப்பு நிற செதில்களுடன் சிவப்பு தோல் வெடிப்பு இருந்தால், பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொள்கிறார்கள்.
இந்த அறிகுறிகளில் சில இன்ஃப்ளூவன்ஸாவின் அறிகுறிகளுடன் தொடர்புடையதென தெரிவிக்கப்படுகிறது, இதனால் பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது மற்றும் காய்ச்சல் தொடர்ந்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.
மேலும், டெங்கு நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத வகையில் இரத்தப் பரிசோதனைகளை செய்துகொள்ளவும் பெற்றோருக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டெங்கு தொற்று இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.
டெங்கு காய்ச்சலை தடுக்கும் முக்கிய நடவடிக்கையாக சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்குமாறும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றனர்.
பெற்றோர்கள் விழிப்புடன் இருக்கவும், தங்களது குழந்தைகளிடத்தில் ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால், தாமதமின்றி சுகாதார நிபுணர்களை அணுகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.