
மூன்று கொள்கலன்களில் தனியார் இறக்குமதியாளர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சுமார் 75,000 கிலோகிராம் அரிசி மனித பாவனைக்கு தகுதியற்றது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று கொள்கலன்களில் இரண்டில் இருந்த அரிசியில் வண்டுகள் காணப்பட்டதாகவும், மற்றைய கொள்கலனில் இருந்த அரிசியின் காலாவதித் திகதி உள்ளிட்ட தகவல்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இந்த அரிசியை மனித பாவனைக்காக விடுவிக்க முடியாது என சுகாதார திணைக்களம் பரிந்துரைத்ததன் காரணமாகவே இந்த அரிசியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது