
வவுனியாவில் இன்றையதினம் கடும் பனி மூட்டத்துடனான வானிலை நிலவுவவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் அண்மைய நாட்களை விடவும் இன்றைய தினம்(22) சற்று அதிக பனி மூட்டமாகக் காணப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடும் பனிமூட்டம் காரணமாகப் போக்குவரத்தை மேற்கொள்வதில் வாகன சாரதிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஏ9 வீதி மற்றும் மன்னார் வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் முன் விளக்குகளை ஒளிரவிட்டபடி பயணித்துள்ளன.