
நாடளாவிய ரீதியில் பண்டிகை காலம் முடியும் வரை இன்று (23) முதல் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடுவதற்காக விசேட போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் விபத்துக்களை கருத்திற் கொண்டு பண்டிகை காலங்களில் விபத்துக்களை குறைப்பதற்காக பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முக்கியமாக பொதுப் பயணிகள் போக்குவரத்துப் பஸ்களை சோதனையிடுவதுடன், போதைப்பொருள் பாவனை மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போக்குவரத்து விதிகளை மீறி பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் இயங்கினால், 119 மற்றும் 1997 என்ற குறுகிய தொலைபேசி இலக்கங்களிலோ அல்லது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து தலைமையகத்தின் பணிப்பாளர்கள் மற்றும் பணிப்பாளர்களின் கையடக்க தொலைபேசி இலக்கங்களிலோ தொடர்பு கொள்ளவும்.
கொழும்பு நகர்ப்புறம், மேல் மாகாணம் வடக்கு மற்றும் தெற்கு போக்குவரத்து பிரிவுகளின் 0718591967, 0718591741, 0718592857, 0718592278 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும் தகவல் தெரிவிக்கலாம்.
போக்குவரத்து விதிகளை மீறுவது அல்லது பிற குற்றங்கள் தொடர்பான காணொளிகள் இருப்பின் அவற்றை அந்த தொலைபேசி இலக்கங்களுக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பி வைக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, அந்தந்த போக்குவரத்து பிரிவுகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளின் தொலைபேசி இலக்கங்கள் பின்வருமாறு
தங்காலை – 0718591488
புத்தளம் – 0718591289
சிலாபம் – 0718591304
குளியாபிட்டிய – 0718591260
நிகவெரட்டிய – 0718591274
குருநாகல் – 0718591244
கண்டி – 0718591042
தெல்தெனிய – 0718592274
மாத்தளை – 0718591079
கம்பளை – 0718591070
நுவரெலியா – 0718591094
ஹட்டன் – 0718591114
இரத்தினபுரி – 0718591382
கேகாலை – 0718591410
சீதாவகபுர – 0718591423
எம்பிலிபிட்டிய – 0718591392
கந்தளாய் – 0718591187
அம்பாறை – 0718591145
மட்டக்களப்பு – 0718591127
திருகோணமலை – 0718591170
காங்கேசன்துறை – 0718591315
யாழ்ப்பாணம் – 0718591327
வவுனியா – 0718591340
மன்னார் – 0718591363
கிளிநொச்சி – 0718591347
முல்லைத்தீவு – 0718591374
மொனராகலை – 0718591533
பண்டாரவளை – 0718591520
பதுளை – 0718591508
கெபதிகொல்லேவ – 0718592902
பொலன்னறுவை – 0718591230
அனுராதபுரம் – 0718591200
களுத்துறை – 0718591688
பாணந்துறை – 0718591674
களனி – 0718591589
பணிப்பாளர் கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவு – 071 8591741
பணிப்பாளர் போக்குவரத்து தலைமையகம் – 071 8591967
பணிப்பாளர் மேல் மாகாண வடக்கு போக்குவரத்து பிரிவு – 071 8592857
பணிப்பாளர் மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு – 071 8592278