
இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று (27) கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக, கொலை செய்யப்பட்டவரின் மருமகனால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் கொலை செய்யப்பட்டவர் புலத்கொஹுபிட்டிய , எஹெலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடையவரெனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.