
தொல்பொருள் இடங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு இரவில் திறப்பதற்கான திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சீகிரியா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு இரவு நேர அணுகலை வழங்கும் முதல் இடமாக இருக்கும் என்று புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பொதுமக்களின் கருத்துக்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்