
நாட்டில் ஏற்பட்ட மின்தடை பிரச்சினைக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், தற்போது முந்தைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (X) இட்டுள்ள பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், ”நாட்டில் ஏற்பட்ட மின்வெட்டுக்கு முந்தைய அரசாங்கங்கள் காரணம் என அரசாங்கம் பழி சுமத்துகின்றது.
ஆனால், பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவையுள்ள காலங்களை நிர்வகிக்கத் தவறிய மோசமான நிர்வாகமும் தான் மின்தடைக்கான உண்மையான காரணம்.
மின்தடை தொடர்பிலான உண்மை நிலையை இது போன்ற தவறான தகவல்கள் மூலம் மறைக்க முடியாது, மின் துறையில் மேற்கொள்ளும் சீர்திருத்தங்கள் மூலம் மாத்திரமே நிவர்த்தி செய்ய முடியும்.
அத்தகைய அமைப்பில் மாற்றம் மற்றும் வெளிப்படைத்தன்மை மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
