
மித்தெனிய முக்கொலைகளுடன் தொடர்புடைய மற்றுமொறு சந்தேக நபர் நேற்று (08) மாலை கைது செய்யப்பட்டார்.
மித்தெனிய பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் குட்டிகல பொலிஸ் பிரிவின் பதலங்கல பகுதியில் சோதனை நடத்தி, 39 வயதான குறித்த சந்தேக நபரை கைது செய்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் கூறுவதாவது, கைது செய்யப்பட்ட நபர் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு உதவியதாக தெரிவித்தனர் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்றது.
இதில் “கஜ்ஜா” என்ற அருண விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், இதுவரை 11 சந்தேக நபர்களும், ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மித்தெனிய பொலிஸார் மற்றும் தங்காலை பிரிவு குற்ற விசாரணை பணியகமும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.