Month: March 2025

உள்ளூராட்சித் தேர்தல் – தபால் மூல வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தபால் வாக்குச் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்…

தேர்தலுக்கான தபால் மூல விண்ணப்ப காலம் இன்றுடன் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது இன்று (12) நள்ளிரவு 12.00 மணியுடன் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச்…

பெண் ஒருவர் எரித்து கொலை ; மூவர் கைது

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலொன்கந்தபிட்டிய, தம்பகல்ல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண் மண்வெட்டியால் அடித்து பின்னர் எரித்துக்…

அரச மருத்துவ அதிகாரிகளின் போராட்டம் நாளை வரை தொடரும்

அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்த போராட்டம் நாளை (13) காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

பாடசாலை விடுமுறை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டில் அரச மற்றும் தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை குறித்து கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…

தேசபந்து தென்னகோனைத் தேடி சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் சி.ஐ.டி சோதனை

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அதற்கமைய, தேசபந்து தென்னகோனை காணும் இடத்திலேயே கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை…

பொதுஜன பெரமுன ஊடாக மீண்டும் களமிறங்கும் லொஹான்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொள்கைக்கு எதிராக செயற்பட்டு ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக தன்னை அர்ப்பணித்து, பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து மீண்டும்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலயவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல்…

அனுராதபுர பெண்மருத்துவர் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் அறிவித்தார். கல்னேவ பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

42 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் அபாயம்

கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 73 பிரதான நீர்த்தேக்கங்களில் 42 நீர்த்தேக்கங்கள் இன்று (12) காலை நிலவரப்படி நிரம்பியுள்ளதென்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பாறை மாவட்டத்தில் 7 முக்கிய நீர்த்தேக்கங்கள், அனுராதபுரம் மாவட்டத்தில் 6 முக்கிய நீர்த்தேக்கங்கள்,…