
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவனைத் தாக்கிய 6 மாணவர்கள் வகுப்புகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பகிடிவதையை எதிர்த்ததற்காக குறித்த மாணவர் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
குறித்த மாணவன் தற்போது வெலிகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பந்தப்பட்ட மாணவர் ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேகத்திற்கிடமான மாணவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.