
நாட்டின் பல பகுதிகளில் நாளை (13) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (12) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது நாளை வரை செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு, அதாவது மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.