
கல்கிஸை கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள், வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் காரரான படோவிட்ட அசங்கவின் போதைப்பொருள் கடத்தலை நடத்தி வரும் சாண்டோவின் இரண்டு சகாக்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.