மாலபேயில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றின் முன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வலான ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து 480 மில்லிகிராம் கொக்கைன், 71 கிராம் குஷ், 850 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 50 கிராம் ஹஷ் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் கடுவெல, ஹேவாகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *