பலாங்கொடை தஹமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மருமகன் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் நேற்று வெள்ளிக்கிழமை (11) தெரிவித்தனர்.
பலாங்கொட தம்மானே பகுதியைச் சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைத் தாக்கச் செல்லும் போது மனைவியின் தந்தை தடுக்க முயன்றபோது குறித்த நபரை தாக்கியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மருமகனின் தலையில் அடிபட்டதன் காரணமாகவே இவர் உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் 65 வயதுடையவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.