காலி இமதுவ பிரதேசத்தில் 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நபரொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 50 வயதுடைய நபருக்கு நேற்று (16) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணையின் பின்னர் குறித்த நபருக்கு காலி மேல் நீதிமன்றம் நேற்று தண்டனை வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மின்சார இணைப்பின் மூலமாக மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்யும் வகையில் கொலையாளி கவனமாக திட்டமிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *