
கட்டுநாயக்கவில் இன்று தொழிலதிபரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சியில் ஈடுபட்டவர்களில் அம்பாறையைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஆடியம்பலம, தெவவெட்டாவ பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாக பொலிஸா் தெரிவித்தனர்.ஆயுதம் செயல்படாததால், சந்தேக நபர்கள் வீட்டின் சுவர் மீது ஏறி தப்பிச் செல்ல முயன்றனர்.
இருப்பினும், தப்பிச் செல்லும் போது காயமடைந்த ஒரு சந்தேக நபரை அப்பகுதி மக்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்தனர், பின்னர் அவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்ததற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.தப்பிச் சென்ற மற்ற சந்தேக நபரை கைது செய்ய கட்டுநாயக்க பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்