ஒல்லாந்தர் காலத்து VOC எழுத்து பொறிக்கப்பட்ட கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

20 இலட்சம் ரூபாவுக்கு ஒல்லாந்தர் காலத்தைச் சேர்ந்த கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்த நபரை ஹட்டன் பொலிஸார் இன்று கைது செய்ததாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர், ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு 20 இலட்சம் ரூபாவிற்கு VOC கேடயம் மற்றும் இரண்டு நாணயங்களை விற்பனை செய்ய வந்துள்ளார்.

சந்தேகநபருக்கு கேடயம் மற்றும் இரண்டு நாணயங்கள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்து சந்தேகநபர் எதுவும் கூறவில்லை எனவும், தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டதோடு, தொல்பொருள் பெறுமதியை உறுதிப்படுத்துவதற்காக தொல்பொருள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அட்டன் தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் (17) இன்று அட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

VOC என்பது ஒல்லாந்தர் கால “கிழக்கிந்திய கம்பனி” எனும் பெயரைக் குறிக்கும் சுருக்கக் குறியீடாகும். இந் நாணயம் 1732 ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *