ஜனாதிபதி அவர்களை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை ஆகவே கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவையில் நேற்று (18) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நாட்டு மக்கள் பாரிய கஷ்டத்தை எதிர்நோக்க நேரீடும்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாம் இன்னும் வெளிவரவில்லை மக்கள் இதனை புரிந்தது கொள்ள வேண்டும் மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது போர் இடம் பெற்று கொண்டுக்கிறது இதனால் எண்ணெய்யை கொள்வனவு செய்வதில் சிக்கல் நிலை ஏற்படும்.
கொரோனா தொற்றுக்கு பிறகு மலையகத்தில் வருமை நிலை 5 சதவீதமாக காணப்படுகிறது மலையகத்தின் பிரதிநிதித்துவத்தை நாம் கட்சி பேதமின்றி வென்றெடுக்க வேண்டும்.
நமக்குள் காணப்படுகின்ற பிரிவினைகள் மற்றும் அரசியல் வேறுபாடுகள் காரணமாக ஆறு உறுப்பினர்கள் வரவேண்டிய இடத்தில் மூன்று உறுப்பினர்கள் வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் காணப்படுகிறது இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க கூடாது.
1977ஆம் ஆண்டு செளமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் தனிநபராக பாராளுமன்றம் சென்றுள்ளார் அதனால்தான் இன்று மலையகத்தில் உள்ள அநேகமான கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர் .
பாராளுமன்றத்தில் தனித்துவம் என்பது எமக்கு முக்கியதுவத்தை வகிக்கிறது இன்று 225ஆசனங்கள் பாராளுமன்றத்தில் இருக்ககூடிய காரணம் 14 மில்லியன் சனத்தொகை காணப்பட்டது இன்று 22 மில்லியன் சனத்தொகை காணப்படுகிறது என குறிப்பிட்டார்.
மேலும், இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொகவந்தலாவை அமைப்பாளர் இளையராஜா நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்