தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.

என்று இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் சிலர் இன்று கேள்வி எழுப்புகின்றனர்.

அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவும், ஊக்குவிப்பு தொகையாக 350 ரூபாவையும் பெற்றுதருவோம் என நாம் உறுதியளித்து அதற்கான வர்த்தமானியும் வெளியானது.

தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் நாம் கடந்த ஆட்சியின்போது அடிப்படை சம்பளம் ஆயிரத்து 350 ரூபாவுக்கு இணங்கி இருக்காவிட்டால் இன்று அந்த அதிகரிப்பு கூட கிடைக்கப்பெற்றிருக்காது. எஞ்சிய தொகையை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுப்போம்.

தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.

எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். அதற்கு நாம் முழு ஆதரவையும் வழங்குவோம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *