எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் இன்று (30) நிராகரித்துள்ளது.

பிரதிவாதி தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த ஆட்சேபனைகளை பரிசீலித்த பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பாராளுமன்ற ஆசனம் பெறவோ அல்லது வாக்களிக்கவோ உரிமை இல்லை என தீர்ப்பளிக்குமாறு கம்பஹா மாவட்ட சுயேட்சை வேட்பாளர் கே.எம். மகிந்த சேனாநாயக்க கோரியிருந்தார்.

இந்த வழக்கில் தேர்தல் ஆணைக்குழு, கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரி, ரஞ்சன் ராமநாயக்க மற்றும் பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *