பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) அரசியலமைப்பை எங்கே கற்றுக்கொண்டார் என்பது குறித்து ஆச்சரியமாக உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
குருநாகல் (Kurunegala) – பன்னலயில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “அரச ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பில் அமைச்சரவையில் தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெறுவது அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்திலேயே அரசியலமைப்பை அவர் எங்கிருந்து கற்றுக்கொண்டார் என ஆச்சரியமாக உள்ளது.இந்தநிலையில் அவர் அரசியலமைப்பை கற்றுக்கொள்ள விரும்பினால், தாம் அவருக்கு அரசியலமைப்பை கற்பிக்க முடியும்.
அத்துடன், கடந்த ஆண்டுகளில் அரச ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான தொழிற்சங்கங்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.