நாட்டில் தேங்காய் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மழையின்மை மற்றும் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் தேங்காய் உற்பத்தியில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே, குறிப்பிட்டார்,தேங்காய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் ஏற்றுமதி நோக்கங்களுக்காக தேங்காய் கருவை இறக்குமதி செய்வது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதிக்காக தேங்காய் துருவலை இறக்குமதி செய்ய அனுமதி கோரியுள்ளதாகவும், ஆனால் அனுமதி இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *