புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
சுதந்திரமான நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.புலமைப்பரிசில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டுமென கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இன்று (26) காலை இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் தெரிவித்தார்.
பாடசாலை கல்வியின் மேம்பாடு தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் கீழ் கல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை களைவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்