இலங்கைக்கு இடையில் நிலவும் இருத்தரப்பு இணக்கப்பாட்டை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதற்கும், தொடர்ந்து இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்கவும் 50 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சர் விஜித ஹேரத் அமைச்சுப் பதவியை ஏற்று 46 நாட்களில் 50 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டு தூதுவர்கள், அமைச்சர்கள், இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலரை சந்தித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அமெரிக்கா, சீனா, பிரித்தானியா, ரஷ்யா, ஜப்பான், சவுதி அரேபியா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, தென்னாபிரிக்கா உள்ளிட்ட இராஜாதந்திர தூதுவர்கள், விசேட இராஜதந்திரிகள், ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி என்பற்றின் பிரதிநிதிளையும் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியிருந்ததாக அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.