கொழும்பு கோட்டை முதல் தலை மன்னார் வரையிலான ரயில் சேவை இன்று (12) முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரத்துக்கு இடையிலான புகையிரத அபிவிருத்தித் திட்டம் காரணமாக, இந்த ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
அதன்படி, இன்று முதல் இயக்கப்படும் ரயில் அட்டவணை வருமாறு:கொழும்பு கோட்டையில் இருந்து மாலை 16.15 மணிக்கு புறப்படும் – 22.15 மணிக்கு தலைமன்னார் வந்தடைதல் (12.11.2024 முதல்)1.00 மணிக்கு தலைமன்னாரிலிருந்து புறப்பாடு. 04.15 – கொழும்பு கோட்டை வருகை காலை 10.15 (13.11.2024 முதல்)