பியூமி ஹன்சமாலிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கு நேற்று (11) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கொழும்பு மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
உள்நாட்டு வருமான வரி சட்டத்தின் 190ஆவது பிரிவின்படி, பியூமி ஹன்சமாலி மற்றும் அவுரா லங்கா நிறுவனத்தின் தலைவர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிராக உள்நாட்டு இறைவரி திணைக்களம் சொத்துகுவிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இவர்களின் வீடுகளை சோதனையிட நீதிமன்ற உத்தரவிட்டபோதும் வீட்டில் இருவரும் இருக்கவில்லை என்று உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தினேஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.