2024ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் 20 பெண்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலான பெண்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகும்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பட்டியலில் இருந்து பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஹரிணி அமரசூரிய, கடந்த பொதுத் தேர்தலின் போது தேசிய பட்டியல் ஊடாக தெவு செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்டத்தில் சமன்மலி குணசிங்க, பதுளை மாவட்டத்தில் அம்பிகா சாமுவேல், நிலாந்தி கோட்டஹச்சி, களுத்துறை மாவட்டத்தில் ஓஷானி உமங்கா , மாத்தறை மாவட்டத்தில் சரோஜா போல்ராஜ், இரத்தினபுரி மாவட்டத்தில் நிலுஷா கமகே, கேகாலை மாவட்டத்தில் சாகரிகா அதாவுத, புத்தளம் மாவட்டத்தில் ஹிருணி விஜேசிங்க, மொனராகலை மாவட்டத்தில் சதுரி கங்கானி, கண்டி மாவட்டத்தில் துஷாரி ஜயசிங்க, காலி மாவட்டத்தில் ஹசர லியனகே, மாத்தளை மாவட்டத்தில் தீப்தி வாசலகே, யாழ் மாவட்டத்தில் ராசலிங்கம் வெண்ணிலா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களை பிரதிநித்துவம் செய்த இரண்டு பெண்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவின் மகளான சமிந்திரனி கிரியெல்ல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகியோர் தெரிவாகி உள்ளனர்