நுகர்வோருக்கான மின்சார கட்டணத்தை குறைக்கும் திட்டத்தில் பகுப்பாய்வு ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
பகுப்பாய்வின் அறிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிய பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட பின்னரே புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மின்சாரக் கட்டணப் பகுப்பாய்வை மாதம் நான்கு தடவைகள் நடத்த வேண்டிய நிலையில், அது முறையாகச் செய்யப்படவில்லை என கலாநிதி சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.
இந்த சவாலான காலக்கட்டத்தில் பொதுமக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குவதற்காக மின்சார கட்டணத்தை குறைப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.