ஐந்து வருடங்களின் பின்னர் பல மாற்றங்களுடன் பலமான தொழிற்ச்சங்கமாக மீண்டெழுந்து வெற்றிக்கொள்வோம் என இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, நானுஓயா மற்றும் புஸ்ஸலாவ ஆகிய காரியாலயங்களுக்கு உட்பட்ட இ.தொ.காவின் மாவட்டத் தலைவர், தலைவி மற்றும் தோட்டக்கமிட்டி தலைவர், தலைவிமார்களுடனான ஜீவன் தலைமையில் நேற்று (24) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது மக்கள் மத்தியில் உரையாடும் போதே ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நடந்து முடிந்த 2024 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இ.தொ.கா விற்கு வாக்களித்த அனைத்து ஆதரவாளர்களுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் நான் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

அதேபோல், எதிர்வரும் காலங்களில் இ.தொ.கா வின் வளர்சிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து எவ்வாறு செயற்படுவது அதன் மூலமாக எவ்வாறான வெற்றியினை பெற்றுக்கொள்வது என்று விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இச்சந்திப்பின்போது, இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தேசிய அமைப்பாளர் பழனி சக்திவேல், பிரதி தலைவர் கணபதி கணகராஜ், பிரதி தேசிய அமைப்பாளர் ராஜதுரை, பிரதி பொதுச்செயலாளர் செல்லமுத்து காரியாலய உத்தியோகத்தர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்த்தர்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *