
மட்டு.வாகரை பிரதேச சபைக்குட்பட்ட மாங்கனி பகுதியில் நேற்றிரவு (25) மினி சூறாவளி ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 7 மணியளவில் ஏற்பட்ட இந்த மினி சூறாவளியில் அப்பகுதியிலுள்ள “லிவிங் கிறிஸ்டியன் அசம்பிலி“ எனப்படும் தேவாலயம் முற்றாக பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி இவ்வனர்த்தத்தில் 7 வீடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் கடற்கரையில் நிலைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு படகுகள் கரைக்கு அப்பால் தூக்கியெறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.