
பிரேசிலில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் ‘பொல்வத்த ஜனக’ என்ற சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாணந்துறை மொதரவில பகுதியிலுள்ள வீட்டுத் தொகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது தானியங்கி துப்பாக்கி மற்றும் ஐந்து தோட்டாக்களுடன் குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மொரட்டுவ முறவத்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும், இவர் முன்னர் ஹெரோயின் கடத்தல் தொடர்பில் பல்வேறு நீதிமன்றங்களில் குற்றம் சுமத்தப்பட்டவர் எனவும் சோதனையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்