
உயர்தரப் பரீட்சை நிலையத்திற்கு செல்ல முடியாத பரீட்சார்த்திகள் அருகில் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு சென்று பரீட்சைக்கு தோற்ற முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சை நாளை (04) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
மேலும், பரீட்சை இல்லாத நாட்களில் நடைபெறும் பாடங்கள் இம்மாதம் 21ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது