
இலங்கையில் புதிதாக 13 சுற்றுலா வலயங்களை உருவாக்கவுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.இலங்கையில் தற்போதைக்கு 26 சுற்றுலா வலயங்கள் காணப்படுகின்றன.
இவற்றுக்கு மேலதிகமாக காலத்துக்குக் காலம் வேறு சிற்சில இடங்கள் தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
எனினும் தற்போதைக்கு உள்ள நிரந்தர சுற்றுலா வலயங்கள் 26க்கும் மேலதிகமாக 13 சுற்றுலா வலயங்களை புதிதாக உருவாக்க சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அநுராதபுரம் (Anuradhapura) , பொலன்னறுவை, திருகோணமலை-குச்சவௌி, யாழ்ப்பாணம் (Jaffna), மாத்தளை (Matale) ,கண்டி (Kandy) போன்ற மாவட்டங்களில் இந்த புதிய சுற்றுலா வலயங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.