
பிரதம மந்திரி கலாநிதி. ஹரினி அமரசூரிய 23ஆம் திகதி மாலை பேருவளை சீனன்கோட்டைக்கு விஜயம் செய்தார்.
சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் மாவத்தையில் உள்ள அன்ஸார் யூஸுப் ஹாஜியாரின் இல்லத்தில் பேருவளை நகர சபை தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுடன் பிரதமர் இதன் போது கலந்துரையாடினார்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர். நளின்ந்த ஜயதிஸ்ஸ, மக்கள் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அரூஸ் அஸாத் உட்பட தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பிரதமருடன் வருகை தந்திருந்தனர்.
தேசிய மக்கள் சக்தி நகர சபை தலைமை வேட்பாளர் மபாஸின் அஸாஹிர் தலைமையில் வேட்பாளர்கள் பிரதமருடன் கலந்துரையாடினர்.
தேசிய மக்கள் சக்தியின் பெருமளவிலான ஆதரவாளர்களும் இதன் போது வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.