வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கள் எனும் பகுதியில் நேற்று (19) இரவு வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் குடும்ஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சேனபுர பகுதியில் திருமணம் முடித்துள்ள வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியில் வசித்த 37 வயதுடைய றிஸ்வான் எனும் நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது மனைவி மற்றும் உறவினருடன் குறித்த நபர் கரப்பொல – முத்துக்கல் வளியாக சேனபுர பகுதிக்கு செல்லும்போது மூவரும் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டனர்.

அதில், இளம் குடும்பஸ்தர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அவரது மனைவி மற்றும் மற்றைய நபர் மரக்கிளையினைப் பிடித்து உயிர் தப்பியுள்ளனர்.

மரணமடைந்த நபரின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *