பொது தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்க்கும சகல தபால் மூலவாக்காளர்களினதும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள்இன்று (01)ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 08 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது. இதற்காக செல்லுபடியான வாக்காளர் இடாப்பாகப் பயன்படுத்தப்படுவது, 2024 ஆம் ஆண்டின் அத்தாட்சிப்படுத்தப்பட்ட 2024(1)CR இடாப்பாகும்.

(2024 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இடாப்பு) பொதுத் தேர்தல் தொடர்பாக, தபால் மூலம் வாக்களிப்பதற்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்துள்ள, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்த அனைத்து வாக்காளர்களும் இம்முறை தேர்தலுக்காக மீண்டும் தமது தபால் மூல வாக்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல் கட்டாயமானதென்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம், தகைமையுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுடைய விண்ணப்பங்களும் 2024.10.08 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னர் உரிய மாவட்டத்தின் மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலருக்குக் (மாவட்டத் தேர்தல் அலுவலகம்) கிடைக்கும் வகையில் அனுப்பி வைத்தல் வேண்டுமென்பதுடன், அனைத்து தாபனத் தலைவர்கள், அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் மற்றும் தபால் மூல வாக்காளர்கள் அனைவருக்கும் அறிவிக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *