
நாட்டின் 9 பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது.
அதன்படி காலி, கண்டி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவற்றில், காலியிலுள்ள கராபிட்டிய பகுதி மிகக் குறைந்த காற்றின் தரத்தைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அதன் காற்றின் தர குறியீட்டு மதிப்பு 106 முதல் 114 அலகுகள் வரை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.