
கொழும்பு துறைமுகப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிகளில் 16 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கும் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட சில எலும்புக்கூடுகளில் குறிப்பிடத்தக்க அளவு உடைந்த பாகங்கள் இருப்பதாகவும் மற்றும் 2 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் இருப்பதாக பேராசிரியர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், அடையாளம் காணப்பட்ட இளம் குழந்தையின் கை எலும்புக்கூட்டில் தாமிரம் கலந்த ஏதோ ஒன்று இருப்பதும் அடையாளம் காணப்பட்டுள்ளது.