
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு மறுநாள் பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் இவ்வாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை என சமூக ஊடகங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அரசு இன்னும் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 15 ஆம் திகதியை பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாகம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) புனித வெள்ளி அன்று வருவதால் அந்த திகதி குறித்து இன்னும் குறிப்பிட்ட முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
