
சாரதிகளை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிர அவதானம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பயன்படுத்தும் ஓட்டுநர்களை அடையாளம் காண நாடு முழுவதும் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றாக தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.