
பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்
பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெள்ளவத்தை – கிருலப்பனை பகுதியை சேர்ந்த 49 மற்றும் 39 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும், சோதனை நடவடிக்கையில் கிருலைப்பனையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.முச்சக்கர வண்டியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு கிருலப்பனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.சந்தேக நபர்களிடம் இருந்து 5,745,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் அப்பகுதியில் எரிவாயு கடை நடத்தி வருகிறார்.